உங்கள் ஆன்மிக பயணம் எப்பொழுது தொடங்கியது ?
நான் முதலில் நம் தாய் தந்தையருக்கு வந்தனம் செய்ய வேண்டும். நாம் பிறக்க நாமே தான் தாய் தந்தை தேர்ந்தெடுத்து வருகிறோம்.
நாம் எதற்கு நமது பெற்றோரை தேர்ந்தெடுக்கிறோம். ஏபிசிடி படித்தால் மீதி உள்ளதை படிக்கவே வருகிறோம். பூமியில் மட்டும் நாம் பயில வருகிறோம்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். நாம் செய்ய எதுவும் இல்லை. பொறுமையை கற்றுக் கொள்கிறோம். நம் சவால்களையும் நாமே தேர்ந்தெடுக்கிறோம் .
ஆனால் பிறக்கும்பொழுது மறந்து போகிறோம். அதனை தெரிந்துகொள்ளவே தியானம் உதவுகிறது.
என் குடும்பம் அறிவார்ந்த குடும்பம். கலை உணர்வுள்ள குடும்பம். தந்தை ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். கோல்ட் மெடலிஸ்ட் அறிவு அவரிடம் இருந்து கிடைத்த தாயிடமிருந்து சங்கீதம் மற்றும் இந்தி மொழியை கற்றுக் கொண்டேன். இருவரிடமும் இதையெல்லாம் கற்றுக் கொள்ளவே இவர்களை தேர்ந்தெடுத்தேன். எங்கள் குடும்பம் சைவ உணவு குடும்பம். என்னுடைய சவால்கள் வேறு. இந்தி தெலுங்கு ஆங்கிலம் கற்றுக் கொண்டேன் .
மாநிலத்தில், இந்தியாவில் ,உலக அளவில் தியானத்தைப் பரப்புவதற்கு இது உதவுகிறது . நம் தாய் தந்தை சிறிய வயதில் நம்மை காப்பாற்றுகின்றனர். நாம் பின்னர் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் .
மாத்ரு தேவோ, பித்ருதேவோ, அதிதி தேவோ நாம் தேர்ந்தெடுக்கும் தாய் தந்தையை சேரும் காலம் வரை நாம் பொறுத்திருந்தே பிறப்போம் .
பாபா கூட நம் வீட்டிற்கு அதிதியாக வரலாம். குறைந்த நேரம் நம்முடன் செலவழித்தாலும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பாடங்கள் நிறைய உள்ளன.
கொரோனா என்பவர் அப்பாயின்மென்ட் வாங்காமல் வந்த அதிதி. எதிர்பாராமல் வருபவரே அதிதி.
கொரோனாவையும் ஒரு அதிதியாக பாவிக்க வேண்டும் .வியாதிகள் எதுவும் நாம் அழைத்து வருவதில்லை. எனில், அவற்றின் மீது அவற்றிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் யாது?
துக்கம் வரும்பொழுது மட்டுமே நாம் ஏன் என்று கேட்கிறோம். சுகம் வரும் பொழுது கேட்பதில்லை. துக்கம் வரும்பொழுது நாம் ஏன் பிறந்தோம் நமக்கான பணி இப்புவியில் என்ன என்ற கேள்விகள் நம்மிடம் தோன்றுகிறது .
பிறக்கும் போது மறந்து போன நாம் தேர்ந்தெடுத்த காரணங்கள் தெரிய வருகிறது. சத்தியத்தை தேடி போனாலே அடைய முடியும். ஒரு நடிகர் கூட தான் நடிக்கும் படத்தின் கதையைப் பிடித்தாலே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
நாம் நாம் கற்க வேண்டிய பாடங்களை நாம் விரும்பித்தான் தேர்ந்தெடுத்து இங்கு நடிக்க வந்தோம். உலகமே நாடக மேடை நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்.
பலர் நமக்கு துக்கம் வந்த பின்னரே ஞானத்தை தேடுகின்றனர். புத்தர் மற்றவர்களின் துக்கத்தை கண்டு ஞானத்தை தேடினார். எத்தனை உயர்ந்த உள்ளம்.
Comentarios