ஆன்மிக அறிவியல் குறித்து அனைவரும் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். எந்த விஷயமும் அதன் பொருள் புரிந்தால் ஒழிய நாம் அதை கடைபிடிக்க முடியாது மனிதன் யார்?
இந்த வாழ்க்கை என்றால் என்ன? இறப்பு பிறப்பு என்பது என்ன? பிறப்புக்கு முன் இறப்பிற்கு பின் நடப்பது என்ன? துக்கமயமான வாழ்வு எது ? மகிழ்ச்சிகரமான வாழ்வு எது?
ஆன்மிக சாஸ்திரம் அறியாதவர்கள் அறியாமையில் வாழ்கிறார்கள். என்ன செய்வது ?என்ன செய்யக்கூடாது? என்ன செய்யப் போகிறோம்?
என்ன சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்ன சிந்திக்கிறோம்? எதற்கு சம்பாதிக்கிறோம்? வாழ்க்கை எப்படி வாழ்கிறோம்?
மரணத்திற்கு தயாராவது எப்படி? என்று எதுவும் அறியாதவர்கள் உலகம் முழுவதும் இந்த சத்தியம் அறியாதவர்கள் உள்ளனர்.
அருகில் உள்ளவர்கள் கார் வாங்கினால் நாமும் வாங்க நினைக்கிறோம் .மாடி வீடு கட்டினால் அதைவிட பெரிதாக கட்ட அடுத்தவர்களை கவனிக்கிறோம்.
ஆனால் யாராவது அருகில் உள்ளவர்கள் விவாகானந்தர் போல, இயேசு போல, ரமண மகரிஷி போல வாழ்கிறார்களே நாமும் அவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிறோமா!
ஆனால் ஆன்மிக சாஸ்திரம் அறிந்தால் யாரும் இவர்களைப் போல் மாறலாம். நீங்கள் வியாபாரியாகவோ , மருத்துவராகவோ, விவசாயியாகவோ இருக்கலாம். ஆத்ம சாஸ்திரம் புரிந்து கொண்டால் கண்டிப்பாக மகான்களாக மாற முடியும் .
முதல் சத்தியம் ஆத்ம சித்தாந்தம்
இரண்டாவது புனர்ஜென்ம சித்தாந்தம்
மூன்றாவது கர்ம சித்தாந்தம்
நான்காவது புரோகமன சித்தாந்தம்
ஐந்தாவது யோக சித்தாந்தம்
ஆறாவது அநேக அநேக சித்தாந்தம்.
முதல் உண்மை என்னவென்றால் நாம் சரீரம் அல்ல ஆன்மாவே .நான் ஆன்மா என்றால் எல்லா உயிரினங்களும் ஆன்மாவே.
பாறையில் உருவத்தை வரைந்து செதுக்கி சிலையை உருவாக்குவது போல அனைவரும் வெவ்வேறு பாத்திரமாக உருவாகிறோம்.
திரைப்படங்களில் திரைகளின் மீது பல படங்களில் பார்க்கிறோம் .படம் முடிந்தாலும் அங்கு இருப்பது திரையே. திரை தான் ஆன்மா .
திரையில் வரும் செடி, மரம் ,பறவை, கதாநாயகன் அனைவரும் ஆன்ம பொருட்களே. பரமாத்மாவிலிருந்து எத்தனை ஆத்மாக்கள் உருவாகுகிறது .
புனர்ஜென்ம சித்தாந்தம்
நாம் பயணம் செய்து பல ஊர்கள் செல்வது போல ஆத்மாக்கள் இங்கு சரீரத்தை இழந்து வேறு உலகம் செல்கிறது.
பின் வேறு சரீரம் கொண்டு மீண்டும் பிறக்கிறது. ஒவ்வொரு ஜென்மங்களிலும் வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து அனுபவிக்கிறது.
வெவ்வேறு கதாபாத்திரங்களில் வாழ்கிறது .மற்ற உயிரினங்களாக பிறக்கும் பொழுது வெவ்வேறு அனுபவம் கிடைப்பதில்லை.
ஆனால் மனித ஜென்மம் எடுக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும் அனுபவங்கள் அளவிடற்கரியது.
கர்ம சித்தாந்தம் ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் செய்யும் கர்மங்கள் வேறு.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விவசாயியாக இருந்தாலும் விஞ்ஞானியாக இருந்தாலும் பல்வேறு கருமங்களை செய்வோம்.
Opmerkingen