வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அர்த்தம் , அனர்த்தம் , பரமார்த்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தற்காலிக தீர்வு , நிரந்தர தீர்வு அர்த்தம் புரிந்தால் பரமார்த்தம் புரியும். நாம் இப்பொழுது ஒவ்வொரு கணமும் அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். முதலில் தேவையென்றால் மட்டுமே பேச வேண்டும். இதை சரியாக செய்யும் பொழுது தான் பரம்பொருளுக்கு அர்த்தம் விளங்கும்.
நாம் பயணம் செய்யும் போது அருகில் இருக்கும் சக மனிதரிடம் அவருடைய விவரங்களை கேட்பது என்பது அர்த்தமுள்ளதே. நீ யாரோ நான் யாரோ என்றிருப்பது மனிதரை மதிப்பது ஆகாது
உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடன் நீங்கள் நடத்தும் சம்பாஷணையும் அர்த்தமுள்ளதாக இருப்பது நல்லது.
பசிக்கும் போது சாப்பிடுகிறோம், வாய் உள்ளது என்று பேசுகிறோம், கண் இருப்பதால் கண்டதையும் காண்கிறோம். சிந்திக்கும் திறன் இருப்பதால் தேவையற்ற சிந்தனைக்கு செல்கிறோம்.
இவை நிரந்தர பொருளுள்ள வாழ்க்கைக்கு உதவாது. தற்பொழுதுள்ள வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்தாலே பரம் பொருள் என்று அர்த்தம்.
மாமிச உணவு நம் சரீரத்திற்கானது அல்ல. நம்முடைய உணவு அரிசி, பருப்பு, தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள் தான்.
பசிக்கு ஆகாரம் தேவை தான். வாழ்க்கைக்குரிய தேவையான பணத்தை திருடிச் சேர்த்தால் பாவமல்லவா. அது போலத்தான் நம் பசிக்காக பிற உயிர்களை கொல்வதும் பாவத்தை சேர்க்கும்.
பிற உயிரனங்களையும் நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ உரிமை உள்ளவர்கள்.
யாரையும் நாம் அதிகாரம் செய்ய நினைப்பதோ, அடக்கி ஆள நினைப்பதோ கூடாது. கண்டிப்பாக வருங்காலத்தில் அவர்கள் கட்டு மீறியே செல்வார்கள்.
ஒருவர் தலைவலி, வயிற்று வலி என்று கூறினால் அதை தற்சமயத்திற்கு உடனடியாக தீர்க்க முடியும். இதற்கு அர்த்தம் என்று பொருள்.
அதையே அவருக்கு தியானம் செய்ய சொல்லிக் கொடுத்து வேதனையை போக்குவதே நிரந்தர தீர்வாகும். இதற்கு பரமார்த்தம் என்று பொருள்.
நிரந்தர தீர்வை நம் கையில் வைத்திருப்பதே நல்லது. தியானமும் ஞானமும் யாரும் கொடுக்க இயலாது.
புத்தகத்தை படி என்று வழி காட்டலாமே தவிர கருத்துக்களை திணிக்கக் கூடாது. எந்த ஒரு செயலை செய்வதற்கு நாம் யாரையும் நிர்பந்திக்க கூடாது.
மனித இனம் தவிர மற்ற உயிரினங்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழும். அவை பசித்தால் தான் உணவு எடுத்துக் கொள்ளும்.
நாமும் வயிறு போதும் என்று சொல்வதற்கு முன்பே உண்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நம் மனமும் உடலும் அதிக சக்தி பெறும்.
இந்தியாவில் கபீர், ஓஷோ, மகாவீர்ர், ரமண மகரிஷி, இயேசு, புத்தர் போன்ற பல தியானிகள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் கற்பித்த தியானத்தை செய்பவர்களே நமது பிரமிட் மாஸ்டர்கள்.
தியானம் செய்பவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை மட்டுமல்லாது பரமார்த்தமுள்ள ஆத்ம வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவர்.
நாம் தினமும் தியானம் செய்வோம். மற்றவர்களுக்கும் கற்று கொடுப்போம். பிரபஞ்சம் முழுவதும் தியானத்தை விரிவடைய செய்வோம்.
நாம் கற்று கொள்ள வேண்டிய அர்த்தம், பரமார்த்தத்தில் தான் புதைந்துள்ளது என்பதை புரிந்து கொள்வோம்.
Comentarios