பத்ரிஜி அவர்களின் சொற்பொழிவு
முதல் சத்தியமான ஆத்ம சித்தாந்தம்
இரண்டாவது சத்தியமான புனர்ஜென்ம சித்தாந்தம்
மூன்றாவது சத்தியமான கர்ம சித்தாந்தம்
நான்காவது சத்தியமான புரோகமன சித்தாந்தம்
ஐந்தாவது சத்தியமான யோக சித்தாந்தம்
ஆறாவது சத்தியமான அநேக அநேக சித்தாந்தம்
இது அனைத்தையும் உணரும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் விரைவாக முன்னேறுகிறார்கள்.
கிருஷ்ணர் அர்ஜுனிடம் கூறியது போல யோகியாக மாறினால் நம் பயணமானது வெறும் பாதையில் அமையாது வானத்தில் செல்வது போல வேகம் எடுக்கும்.
பிரமிட் மாஸ்டர்கள் எல்லாம் யுவ மாணவ முதிர்ந்த ஆத்ம நிலைகளை கடந்து கற்பிப்பதற்காக பிறந்த ஆன்மாக்களே.
பிரமிட் மாஸ்டர்கள் ஓரிடத்தில் இருந்து பயிற்சி செய்ய பிறந்தவர்கள் அல்ல ஊர் ஊராக சென்று அனைவருக்கும் கற்று க் கொடுப்பதற்காக பிறந்தவர்களே
. ரமண மகரிஷி தன்னிடம் வருபவர்களிடம் உன்னை குறித்து நீ அறிவாயா என்றே கேட்பார். பிரமிட் மாஸ்டர்கள் ஊர் ஊராக அலைந்து இந்த சித்தாந்தங்கள் குறித்து கூறி வருகின்றனர்.
அநேக அநேக சித்தாந்தம் என்பது எல்லை இல்லாதது .இந்த பிரபஞ்சத்தில் ஓர் உலகம் மட்டுமே இல்லை . எண்ணிக்கையில் அடங்காத உலகங்கள் உண்டு.
பாவம், புண்ணியம், பிறப்பு, சந்தோஷம், துக்கம் அனைத்தும் எல்லையில்லாதவையே. சிவனிடம் வந்த பக்தர்கள் நாங்கள் கடின தவம் செய்து உங்களை காண வந்தால் நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறீர்களே என்றனர்.
அவர் எனக்கு மேல் உள்ள அண்டத்தில் எல்லையற்ற லோகங்கள் உண்டு. நான் அதை அறிந்து கொள்ளவே தியானத்தில் இருக்கிறேன் என்றார்.
மகாவீரர் இயேசு புத்தர் அனைவரும் யோகேஸ்வரர்களே. எத்தனை ஜென்மங்கள் தியானம் செய்ததன் கர்ம பலனாலே தாங இப்பிறவியில் பிரமிட் மாஸ்டர்களாக உருவாகின்றனர்.
ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கர்மங்கள் கர்ம பலன்களை நமக்கு உறுதியாக தருபவையே .இந்த கர்ம சித்தாந்தத்தை உணர்ந்து கொண்டால் நாம் வாழ்வில் என்றும் ஆனந்தத்துடனும் அமைதியுடனும் வாழலாம்.
Comments