நாம் எந்த செயல்களைச் செய்தாலும் அதற்கான விளைவுகளை உருவாக்கவே செய்கிறோம் இது பிரபஞ்சத்தின் ஆதி விதியாகும். ஆனால் நாம் விரும்பிய விளைவுகளை உருவாக்குகிறோமா என்றால் அதை அறிதியிட்டு கூற முடியாது. ஆனால் விளைவுகளின் விழிப்புணர்வு இல்லாமல் செயல்களைச் செய்பவர்களும் உள்ளனர்.
பிரபஞ்ச விதியின்படி நீங்கள் தெரிந்து செய்தாலும் , விளைவுகளை அறியாமல் செய்தாலும் விளைவுகள் உண்டு . அது மாற்ற முடியாதது . ஓரு வேளை அறியா பருவத்தினர் எனில் நம்முடைய பௌதிக உலகிலும் அவர்களுக்கு தண்டனைகளில் சில சலுகைகள் இருப்பது போல [ சிறைச்சாலைகள் இல்லாமல் சீர்த்திருத்தப் பள்ளி தண்டனையாவது போல ] பிரபஞ்சத்திலும் தண்டனைகளின் தீவிரம் சற்றே குறையக் கூடும்.
ஆனால் விளைவுகளைை அறிந்துக் கொண்டே செயலாற்றுபவர்களுக்கு கிடைக்கும் கர்ம்ப் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கவும் கூடும். ஆனால் நாம் ஏன் நாம் செய்யும் செயல்களுக்கு பலன் நிச்சயமாக கிடைக்க வேண்டும் என்றே செயலாற்றுகிறோம். செயல்களை செய்யும் பொழுது உண்டாகும் ஆனந்தத்தை ஏன் தவற விடுகிறோம்.
கிடைத்தற்கு அரிய மானிட பிறவி கிடைத்தும் நாம் வாழ்வதற்கு கூட ஒரு நோக்கத்தை தேடுகிறோம். விழிப்புணர்வோடு வாழ்வதே வாழ்வின் நோக்கமாகாதா? வாழ வேண்டும் என்ற காரியத்திற்கும் காரணத்தை தேடுகிறோம். சில சமயங்களில். வரக்கூடிய விளைவுகள் என்று நாம் நினைக்கும் கர்ம்ப் பலன்களைக் குறித்து எப்பொழுதும் அச்சத்துடன் சிந்தித்து செயலற்றும் போகிறோம்.
வாழ்வின் அழகு என்பது சரியோ, தவறோ செயல்களை செய்து அதிலிருந்து நாம் கற்கும் பாடங்களில் தான் இருக்கிறது. வாழ்வை வரம் என்று உணர்பவர்கள் மட்டுமே வாழ்வின் உன்னத்த்தை உணர்கிறார்கள். வாழ்வை பாரம் என்று நினைப்பவர்கள் அதை முழுமையாக வாழாமல் அரிதாக கிடைத்த இந்தப் பிறவியின் வாய்ப்பை தவற விடுகிறார்கள்.
சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பது போல் விளைவுகள் இல்லாமல் போகலாம். அதற்கான காரணம் நமக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்காக வாழ்வில் வெறுப்பை வளர்ப்பது நமக்கான இழப்பாகத் தான் இருக்கும்.
ஒரு கதை ஒன்று உண்டு. மரக்கிளையில் உச்சியில் ஒருவனும் அமர்ந்திருக்கிறான். மற்றொருவன் மரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறான். தூரத்தில் ஒரு ரதம் வருவதை மேலே உள்ளவன் எளிதாக பார்க்கிறான் . கீழே இருப்பவனுக்கோ ஒன்றும் தெரியவில்லை. அவனுக்கு ரதம் வருவது நிஜம் அல்ல.
நிகழ்வு உண்மையென்றாலும் நமது பார்லை குறுகியதாக இருந்தால் நமக்கு உண்மை புரிவதில்லை. நமது வாழ்வில் நடப்பதும் இதுவே தான் வருவது தெரியாமல் கலங்கும் மனங்களே இங்கு உள்ளன. வாழ்வில் நிகழ்வது அனைத்தும் நமக்கானதே என்ற விரிவானப் பார்வை இருப்பின் இந்தக் காரணக் காரிய பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
நமது பார்வையை தியானத்தினால் வரும் புரிதல் மூலம் விரிவாக்கும் போது நமது வாழ்வில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை என்பது தெளிவாக புரியும் . ஏன் பெரிய மகான்கள் சும்மாயிரு என்று சொல்கிறார்கள் என்பதன் பொருள் விளங்கும் சும்மாயிரு என்பது செயலற்று இருப்பதல்ல. செயல்களின் விளைவுகளில் பந்தப் படாமல்
Comentários