பத்ரிஜி அவர்களின் சொற்பொழிவு பாகம் 3
நம்மை ரட்சிப்பது நாம் செய்த புண்ணியமே . தர்மம்் தலை காக்கும். நாம் செய்யும் அதர்மமேே நம்மை கை விடுகிறது. புத்தர் கடவுளைக் குறித்து மட்டுமே கூறினார்.
தர்மம்் சரணம் கச்சாமி . தர்மம் புரிபவர்கள் .கூடும் சங்கம் சரணம் கச்சாமி புரிந்துக் கொண்டவர்கள் புத்தரே. புத்தம் சரணம் கச்சாமி . பிரமிட் ஆசான்கள் தியானம் சரணம் கச்சாமி என்கின்றனர்.
அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வர தியானம் செய்ய வேண்டும் . புத்தரும் சத்தியம் தேடி அலைந்து பின் தியானம் செய்தபிறகே ஞானம் பெற்றார்.
பிரமிட் மாஸ்டர்களும் தியானம் செய்த பின் யுரேகா என்றனர். ராத்திரி சரியான தூக்கமில்லை என்றால் மறுநாள் நம்மால் சரியாக செயல்பட முடியாது.
ராத்திரி தூக்கம் இல்லாமல் போனதற்கு முன் தினம் நாம் செய்த செயலே காரணம். கர்மப்் பலன்களும் தொடர்விளைவே.
சிசுபாலன் எப்பொழுதும் கிருஷ்ணரை வசைபாடினான். ருக்மிணியை கவர்ந்து சென்றது அவனுக்கு கோபம். ருக்மிணி தன்னை வுரும்பவில்லை என்பதை அவன் உணரவில்லை.
சிசுபாலன் இறந்தது கிருஷ்ணரால் அல்ல . அவன் செய்த அதர்மத்தால் மட்ிடுமே. கிருஷ்ணர் ஒரு கருவி மட்டுமே. ராவணன் இறந்ததும் ராமரால் அல்ல .அவன் செய்த அதர்மத்தால் மட்டுமே.
நம் பாவமே நம்மை சிட்சிக்கிறது. நமது புண்ணியமே நம்மை ரட்சிக்கிறது. நமது யதார்த்த்தை நாமே உருவாக்குகிறோம். வேறு யாரும் அல்ல.
தர்மம் அஹிம்சை. அதர்மம்் ஹிம்சை. உலகம் முழுவதும் ஹிம்சை நடக்கிறது . வடதுருவத்தின் பாதிப்பிற்கு தென் துருவத்தில் காரணம் தேடுகின்றனர்.
பிறப்பிற்கான காரணம் தெரிந்தால் நாம் பேசுவது , சாப்பிடுவது ,செய்வது அனைத்திலும் கவனமாக இருப்போம். யாராவது துக்கத்துடன் வந்தால் மருத்துவர் போல் நான் ஒரு சீட்டு தருகிறேன்.
தியானம் காலை மாலை இரு வேளை செய்யுங்கள். அனைவருக்கும் ஒரே சீட்டு தான் தருகிறேன். உன் வயதுக்கேற்ப தியானம் செய் . அதுவே என்னுடைய மருந்து சீட்டு.
தான தர்ம்ம் தா என்றால் . உன் சமயம் ,நேரம், பொருள், பணம், அறிவு, எதுவாக இருந்தாலும் கொடுக்கலாம் . கொடுப்பதே தர்ம்ம். தர்மம்் செய்தால் உனக்கு நீயே நண்பன .
அதர்மம் செய்தால் உனக்கு நீயே எதிரி. பகவத் கீதை அருமையாக விளக்குகிறது. கீதையில் உள்ளவற்றை குறித்து நமக்கு சந்தேகமே வேண்டாம் .
சந்தேகமே சங்கடங்களை கொண்டு வரும் . அவரவர் தியானத்தை அவரவரே செய்ய வேண்டும் . அனைவரும் அசத்தியம் மற்றும் அதர்மத்திலிருந்து சத்தியம் மற்றும் தர்மத்திற்கு வாருங்கள்.
Comments